மேலும்

தனித்தனி அறைகளில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், 200 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும்  தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நடத்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

269 பேர் கொல்லப்பட்ட , 500-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தொடர்ந்து, தண்டனை பெற்றவர்கள், தண்டனையை அனுபவிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களைத் தனித்தனி அறைகளில் அடைத்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தண்டனை பெற்றவர்கள் சிறையில் உள்ள மற்ற கைதிகளுடன் சுமூகமாகப் பழகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *