மேலும்

சிறிலங்காவில் பணவீக்கம் 8%மாக அதிகரிப்பு

சிறிலங்காவில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

ஜூலை மாதத்தில் 7.3% ஆக இருந்த பணவீக்கம்,  ஆகஸ்ட் மாதத்தில் 0.7%வீதத்தினால் உயர்ந்துள்ளது.

உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட விளைவே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று சிறிலங்கா மத்திய வங்கி கூறியுள்ளது.

உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3% ஆக இருந்த நிலையில் இருந்து, ஓகஸ்ட் மாதத்தில் 8.5% ஆக உயர்ந்துள்ளது. இதுவே ஒட்டுமொத்த பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 7.8% இலிருந்து 7.7% ஆக சிறிதளவு குறைந்ததுள்ளது.

பணவீக்கத்தை 5% இற்குள் கட்டுப்படுத்தும் சிறிலங்கா மத்திய வங்கியின் இலக்கை மீறி கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *