பெட்ரோல் விலை 15 ரூபாவினால் குறைப்பு
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
92 ஒக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 15 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 414 ரூபாவாக இருந்த விலை 399 ரூபாவாக குறைந்துள்ளது.
95 ஒக்டேன் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ. 20 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 495 ரூபாவில் இருந்து 475 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
ஓட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
