செம்மணிப் புதைகுழியில் நேற்று மட்டும் 16 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 19ஆம் நாள் அகழ்வுப் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த அகழ்வின் போது 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 318ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 302 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
படம்- பிரபாகரன் டிலக்சன் (முகநூல்)

