சிறிலங்காவில் இருந்து புறப்பட்டார் ராஜ்நாத் சிங்
சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்திலிருந்து, இந்திய விமானப்படையின் சிறப்பு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பயணத்தின் போது, அவர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, மற்றும் பல அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
அத்துடன், கொழும்பு கங்காராமய விகாரையில் நேற்று வழிபாடுகளை செய்த ராஜ்நாத் சிங் இன்று நுவரெலியவுக்குச் சென்று சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடுகளைச் செய்திருந்தார்.
