மேலும்

அவசரகால நிலை நீடிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரால் அவசரகால நிலையை நீடிக்கும் அரசிதழ் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு அங்கீகாரம் பெறும் நோக்கில் இந்தப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 135 வாக்குகள் ஆதரவாகவும், 7 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்ட நிலையில், 128 மேலதிக வாக்குகளினால் அவசரகால நிலை நீடிப்புக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, 82 உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *