சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து சரிவு
அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளின்படி, இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 331 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டொலரின் வாங்கும் விலை, ரூ. 322.28-இல் இருந்து இன்று ரூ. 323.53-ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை, ரூ. 329.92- இல் இருந்து ரூ. 331.72-ஆக அதிகரித்துள்ளது.
2023 டிசம்பர் 22ஆம் நாள், அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 331.30 ஆக இருந்த பின்னர், இதுவே மிக உயர்ந்த விற்பனை விலையாகும்.
அதேவேளை இன்று சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை, 332 ரூபாவைத் தாண்டியுள்ளது.
