மத்தலவில் போர் விமானங்களை தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா
மத்தல விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரியதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிமைமைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லெண்ணப் பயணமாக சிறிலங்காவுக்கு வருவதற்கு மூன்று ஈரானிய கப்பல்கள் விடுத்த கோரிக்கையையும், மத்தலவில் தனது இரண்டு போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு அமெரிக்கா விடுத்த கோரிக்கையையும், சிறிலங்கா நிராகரித்தது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்ததன் மூலம் சிறிலங்கா நடுநிலைமையைக் கடைப்பிடித்தது, என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
