மேலும்

சிறிலங்கா அருகே ஈரானிய கப்பலை ஏன் மூழ்கடித்தீர்கள்?- கேள்வி எழுப்பிய ட்ரம்ப்

சிறிலங்கா  கடற்பகுதியில், ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிக்கும் முடிவை தான் கேள்விக்குட்படுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கென்டக்கியின் ஹெப்ரானில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய ட்ரம்ப், அந்தக் கப்பலை கைப்பற்றுவதற்குப் பதிலாக ஏன் அழிக்கப்பட்டது என்று இராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாகக்  குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஏன் அவர்களைக் கொன்றோம் ? ஏன் அவர்களைப் பிடித்து எங்கள் கடற்படை பயன்படுத்தவில்லை? என்று என்று கேட்டேன்.

அதற்கு ஜெனரல்களில் ஒருவர், கப்பலை மூழ்கடிப்பது நல்லது என்று என்னிடம் கூறினார். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிறிலங்காவிற்கு அருகே அனைத்துலக கடற்பகுதியில் ஈரானிய கடற்படை போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்டது, தாக்குதலில் 104 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *