செம்மணிப் புதைகுழியில் இதுவரை 355 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இருந்து நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 24ஆம் நாளான நேற்று, புதிதாக 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நேற்றைய அகழ்வின் போது, 7 மனித எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது.
படம்- பிரபாகரன் டிலக்சன்( முகநூல்)

