அனுர அரசு பெற்றுள்ள 1.85 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள்
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிறிலங்கா 1.85 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட 18 அபிவிருத்தித் திட்டங்களுக்காக, 2024 அதிபர் தேர்தலுக்கும் 2026 மே 5ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நிதி பெறப்பட்டதாக நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளது.
இதில், அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் உதவி உள்ளடக்கப்படவில்லை.
ஜப்பான், தென் கொரியா, சவூதி அரேபியா, நெதர்லாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிடம் இருந்தே இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன.
