வல்வையில் தமிழினப் படுகொலை, மாவீரர் நினைவுத் தூபிகள் அமைப்போம்
வல்வெட்டித்துறையில் தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும், மாவீரர்களுக்கான நினைவுத் தூபியும் நிறுவப்படும் என்று தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் இடம்பெற்ற, நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்காய் கஞ்சி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையாக போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகரபையில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறோம்.
இங்கு தமிழினப் படுகொலை நினைவுத் தூபியையும், மாவீரர்களுக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவோம்.
இதற்காக வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சியை சிறிலங்கா அரசாங்கம் கலைத்தாலும் பரவாயில்லை.
தனியார் காணியில் அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.