பாலஸ்தீனத்திற்கு ஆதரவு, இஸ்ரேலுடன் உறவு – சிறிலங்காவின் இரட்டை வேடம்
சிறிலங்கா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, இராஜதந்திர, பொருளாதார தேவைகளுக்காக, இஸ்ரேலுடன் உறவை பேணும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனிய விவகாரத்துக்காக இஸ்ரேலுடனான உறவை திடீரெனத் துண்டித்தால், சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
இதனால், இஸ்ரேலில் பணியாற்றும், இலங்கையர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, எங்களால் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்க முடியாது.
உலகின் பல நாடுகளை போல, நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம். ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகள் கருதி, இஸ்ரேலுடன் உறவை பேணுவோம்.
நாங்கள் சுதந்திர பாலஸ்தீன தேசம், சுதந்திர இஸ்ரேல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறோம். இரண்டையும் வேறு வேறு அரசாங்கங்களாக நாங்கள் கருதுகின்றோம்.
எனவே, இஸ்ரேலுடன் தொடர்ந்து உறவுகளை பேணுவோம்.
சுதந்திர பாலஸ்தீன தேசம் என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா உறுதியாக உள்ளது.
இஸ்ரேல் அப்பாவி பாலஸ்தீனர்களை கொலை செய்வதை கண்டிக்கின்றது.“ என்றும் சிறிலங்கா அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.