மேலும்

வாக்குச்சீட்டில் அடுத்தடுத்து கோத்தா, நாமலின் பெயர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில், கோத்தாபய ராஜபக்சவின் பெயரும் நாமல் ராஜபக்சவின் பெயரும் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன.

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒழுங்கும், வேட்பாளர்களுக்கான சின்னங்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன.

வாக்குச்சீட்டில் வேட்பாளர்கள் எந்த ஒழுங்கில் இடம்பெறுவார்கள், அவர்களின் சின்னம் என்ன என்பதை விளக்கும் வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வாக்குச் சீட்டில் முதலாவது இடத்தில் நாய் சின்னத்தில் போட்டியிடும் அபரக்கே புஞ்ஞானந்த தேரரின் பெயர் இடம்பெறவுள்ளது. கடைசி இடத்தில், மின்குமிழ் சின்னத்தில், போட்டியிடும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பெயர் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அடுத்ததாக, மூக்குக் கண்ணாடி சின்னத்தில் போட்டியிடும், தேசிய ஒற்றுமை முன்னணியின் நாமல் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவுள்ளன.

வாக்குச்சீட்டில்  இடம்பெறவுள்ள வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களின் ஒழுங்கு வருமாறு-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *