மேலும்

மாதம்: September 2019

‘நீர்க்காகம் தாக்குதல் X’ –  சிறிலங்காவின் பாரிய கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும், பாரிய களப் பயிற்சி ஒத்திகையான, நீர்க்காகம் தாக்குதல் X -2019 நேற்று ஆரம்பமாகியுள்ளது.

தேர்தல் அறிவிப்பினால் தேர்தல் ஆணைக்குழுவுக்குள் முரண்பாடு

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

5 எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய, கொமன்வெல்த் பிரதிநிதிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாட்சியமளிக்க சிறிலங்கா அதிபர் இணக்கம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, சாட்சியமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே வெடித்தது மோதல்

இந்திய – பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இடையில் நடந்த காரசாரமான வாக்குவாதங்களை அடுத்து, கொழும்பில் நடந்த சிறுவர்களுக்கான தெற்காசியா நாடாளுமன்ற தளத்தின், அமர்வை சுருக்கமாக முடிக்கும் நிலை ஏற்பட்டது.

பிரதமர் பதவியை குறி வைக்கிறார் மைத்திரி – அதிபர் தேர்தல் குறித்து மௌனம்

அதிபர் பதவியை விட பிரதமர் பதவியே அதிகாரம் கொண்டதாக மாறியிருப்பதால், அதன் மீதே இனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், 2020இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வேட்புமனு கோரும் அறிவித்தல் செப்.20 இற்குப் பின் எந்த நேரமும் வெளிவரலாம்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் 20ஆம் நாளுக்குப் பின்னர், வெளியிடப்படும் என்று தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு இன்று வெளிவரும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஒக்ரோபர் 11இல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் 11ஆம் நாள் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளது.