மேலும்

மாதம்: April 2019

கொழும்பு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கம் – ஒரே குடைக்குள் முப்படைகள், காவல்துறை

சிறிலங்கா அரசாங்கம்  கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம்  என்ற புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.  மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து இராணுவ, கடற்படை, விமானப்படை, மற்றும் காவல்துறை பிரதேசங்களும், உடனடியாக ,இந்த கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியாவின் உதவியைக் கோரியது சிறிலங்கா – சென்னையில் 100 கொமாண்டோக்கள் தயார்

உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை சிறிலங்கா கோரியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக ஜெனரல் சாந்த கொட்டேகொட

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை இந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

இராணுவ சீருடையில் 5 இலக்குகளை தாக்க திட்டம் – பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

ஈஸ்டர் நாளன்று தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள், இராணுவ சீருடைகளுடன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடவில் இன்னொரு தற்கொலைக் குண்டுதாரி? – மரபணுச் சோதனைக்கு நடவடிக்கை

தெமட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றொரு தற்கொலைக் குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முடிவு செய்ய மரபணுச் சோதனை நடத்தப்படவுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புக் குழுக்கள் நீண்டநாட்கள் தங்கியிருக்காது 

அமெரிக்க  பாதுகாப்புக் குழுக்கள் நீண்ட நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

பெண் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி விகாரைகளில் தாக்குதல் நடத்த திட்டம்

பெண் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி, பௌத்த விகாரைகளில் தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் 139 பேர் – 45 பேர் சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில், சிரியாவில் பயிற்சி பெற்ற 45 பேர் உள்ளிட்ட 139 உறுப்பினர்கள் இருப்பதாக, சிறிலங்கா படைகளின் புலனாய்வுப் பிரிவுகளின் அண்மைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

முன்னாள் படைத் தளபதிகளைச் சந்தித்த மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக, முன்னாள் படைத் தளபதிகளுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் ஜயந்த ஜயசூரிய

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக ஜயந்த ஜயசூரிய  பதவியேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை அவர் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார்.