மேலும்

நாள்: 18th March 2019

சிறிலங்காவில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் – சம்பந்தன்

இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,  ஐ.நாவின் முன்னாள் அரசியல் விவகாரச் செயலர் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை முற்றுகையிடும் தமிழர், சிறிலங்கா தரப்புகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும், சிறிலங்கா அரசதரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்துப் பேசவுள்ளனனர்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக  எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலைத் துறைமுகத்தில் இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ஜெனிவாவில் காட்டிக் கொடுக்கக்கூடாது – எச்சரிக்கிறார் மகிந்த

சிறிலங்காவை ஜெனிவாவில் காட்டிக் கொடுக்கக் கூடாது என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச.

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் – எஸ்.பி.திசநாயக்க

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.