மேலும்

நாள்: 10th March 2019

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த மறுக்கும்  சிறிலங்கா இராணுவம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த  சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இயக்க அமைச்சரவை பச்சைக்கொடி

இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து, மத்தல அனைத்துலக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

சிறிலங்காவுக்கு கடன் வழங்க இழுத்தடிக்கிறது சீனா

சிறிலங்கா அரசாங்கத்துக்கு, முன்னரைப் போன்று இலகுவாகவும் விரைவாகவும், கடன்களை வழங்குவதற்கு சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தலைமறைவான அட்மிரல் கரன்னகொட நாளை சிஐடியில் முன்னிலையாவார்

சிறிலங்கா காவல்துறையினரின் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வரும் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட நாளை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலையாகவுள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டனம்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.