மேலும்

நாள்: 19th March 2019

ஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழு குழப்பம் – தமிழ்ப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான  குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் அமெரிக்காவின் செயலகமா? – வீரவன்சவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுமத்திய குற்றச்சாட்டை, சிறிலங்கா அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார்.

எந்த விசாரணைக்கும் அஞ்சவில்லை – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

போரின் போது சிறிலங்கா படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சமலின் விலகல் கடிதத்தை 3 மாதங்களுக்குப் பின் ஏற்றுக்கொண்ட சிறிசேன

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இணை அனுசரணை நிலைப்பாட்டில் மாற்றமில்லை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மூன்றாவது தடவையாக அட்மிரல் கரன்னகொட சிஐடியினால் விசாரணை அழைப்பு

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, மூன்றாவது தடவையாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி

வரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவான விடயமல்ல என்றும் அதற்கு 6.5 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர.