மேலும்

நாள்: 1st March 2019

ஜெனிவா கூட்டத்தொடர் – நழுவுகிறது சிறிலங்கா அரசு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில்  பங்கேற்பதற்கு சிறிலங்காவில் இருந்து அரசாங்க குழு ஜெனிவாவுக்கு செல்லாது என்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமந்தா பவர் உரையாற்ற முன் திடீரென வெளியேறினார் சிறிலங்கா அதிபர்

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து  வெளியேறிச் சென்றார்.

போரை நிறுத்தாவிடின் போர்க்குற்றச்சாட்டு சுமத்துவோம் – சிறிலங்காவை எச்சரித்த பிளேக்

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு போரை நிறுத்தாவிட்டால், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக இருந்த றோகித போகொல்லாகமவிடம் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார் என்று தகவல் வெளியிட்டுள்ளார் கலாநிதி மொகான் சமரநாயக்க.

அதிகாரப்பகிர்வு குறித்து பரிசீலிக்க 4 பேர் கொண்ட குழு – சிறிலங்கா அதிபரால் நியமிப்பு

புதிய அரசியலமைப்பின் அதிகாரங்களைப் பகிர்வு குறித்து பரிசீலிப்பதற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பில் 2008 – 09ஆம் ஆண்டு காலப்பகுதியில்  11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக விரைவில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் – வெளியானது தீர்மான முன்வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.