மேலும்

நாள்: 6th March 2019

எல்லையை மீறும் இராஜதந்திரிகள் – சிறிசேன சீற்றம்

சில வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது எல்லையை மீறுகிறார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தலுக்கு வாய்ப்பு – சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்தினால் மைத்திரி – ரணில் இடையே வெடித்தது மோதல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பி, ஐ.நா தலையீடுகளை எதிர்ப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவினால், அரசாங்கத்துக்குள் மோதல் வெடித்துள்ளது.

ஐ.நா தலையீட்டை எதிர்க்க சுரேன் ராகவனை ஜெனிவாவுக்கு அனுப்புகிறார் சிறிலங்கா அதிபர்

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கண்டி பேரணியில் பங்கேற்கமாட்டேன் – சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்கிறார் கோத்தா

கண்டியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேரணியில், தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2019ஐ இராணுவ ஆண்டாக பிரகடனம் செய்கிறது சிறிலங்கா அரசாங்கம்

2019 ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்குமா? – சம்பந்தன் பதில்

சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த வரவுசெலவு திட்டத்தை ஆதரிப்பதா- இல்லையா என்பது குறித்து , ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை ஓரம்கட்டிய நோர்வே – சீற்றத்தில் கூட்டு எதிரணி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மரியன் ஹகென், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்காதமை, கூட்டு எதிரணியினருக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணிவெடிகளை அகற்ற 60 மில்லியன் குரோனர்களை வழங்கும் நோர்வே

சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 60 மில்லியன் குரோனர்களை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.

நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2019: நீங்களும் பரிந்துரை செய்யலாம்

நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.