மேலும்

நாள்: 22nd March 2019

கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

989 மில்லியன் டொலர் கடன் உடன்பாட்டில் சீனா- சிறிலங்கா கையெழுத்து

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 989 மில்லியன் டொலர் இலகு கடனை வழங்கும் உடன்பாட்டில் சீனாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம், இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.

லிமா -2019 பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா கடற்படை

மலேசியாவின் லங்காவி நகரில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

பிறெக்சிற்குப் பின்னும் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை – பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று, பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகளை சீனா எதிர்க்காது

அம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் கடத்தல் கடற்படை உயர்மட்டத்துக்கு தெரியும் – சிஐடி

கொழும்பில் சிறிலங்கா கடற்படையினர் சிலரால்  இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் தெரிவித்தனர்.