மேலும்

மாதம்: March 2019

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் அவுஸ்ரேலிய கடற்படை உயர்நிலைத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் கூட்டு நடவடிக்கை பிரதி தளபதி மேஜர் ஜெனரல் றோஜர் நோபிள், சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா வருகிறது

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

திருகோணமலையில் இருந்து புறப்பட்டன அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்

திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களும் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன.

சிறிலங்கா படையினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் – அவுஸ்ரேலியா

சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் சரிந்துபோன கபொத சாதாரண தர தேர்வுப் பெறுபேறு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு பெறுபேறு நேற்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மண்டியிட்டார் வடக்கு ஆளுநர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்புத் தொடர்பாக, தாம் கூறிய விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் தவறாக மேற்கோள்காட்டப்பட்டு, தவறாக பிரசுரிக்கப்பட்டிருப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி

அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின்  கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இன்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.

சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திர வணிக உடன்பாடு பற்றிப் பேச சீனா செல்கிறார் மலிக்

சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுக்களை மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான இந்தப் பேச்சுக்கள் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.