மேலும்

நாள்: 16th March 2019

சிறிலங்காவுடன் இராஜதந்திர, இராணுவ உறவுகளை வலுப்படுத்த வேண்டும் – அமெரிக்க ஆய்வாளர்

சிறிலங்காவுடன் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு  அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் பழமைவாத  சிந்தனையாளரான, ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் தோடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.

மத்தலவுக்கு வரவுள்ள அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம்

அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்று மத்தல விமான நிலையத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் நாள் தரையிறங்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

பாரிய கூட்டுப் பயிற்சிக்காக 1000 அவுஸ்ரேலிய படையினர் 4 போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா வருகை

சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர்.

சிறிலங்காவின் இரு முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு  உயர்பதவிகள்

சிறிலங்காவின் இரண்டு முன்னாள் கடற்படைத் தளபதிகள் அரசாங்கத்தின்  உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் அமெரிக்கா பறக்கிறார் கோத்தா – நீதிமன்றம் அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது.

கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் இலங்கையர்கள் சிக்கவில்லை

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.