மேலும்

நாள்: 9th March 2019

பிசுபிசுத்துப் போன மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரியும் வரவில்லை

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை.

சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு

சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மகிந்தவைச் சந்திக்காதது ஏன்?

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர்  மரியன் ஹகென் இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, சந்திக்கவில்லை என்று  நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரின் ஆதரவு இன்றியே வெற்றி பெறுவேன் – கோத்தா

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சட்ட நிபுணர்களுக்கு விசாரணையில் இடமில்லை – சிறிலங்கா அரசு

வெளிநாட்டு சட்ட நிபுணர்களுக்கு உள்நாட்டு விசாரணைகளில் இடமளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

குற்றம் இழைத்திருந்தால் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தண்டனை – சரத் பொன்சேகா

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஏதாவது தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.