மேலும்

ஊடகத்துறை அமைச்சராக ருவன் விஜேவர்த்தன

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, ஊடகத்துறை அமைச்சராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போது, ஊடத்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் மங்கள சமரவீர பதவி வகிக்கிறார். அவரிடம் இருந்து ஊடகத்துறை அமைச்சு மீளப் பெறப்பட்டு, ருவன் விஜேவர்த்தனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதற்கான பரிந்துரையை சிறிலங்கா அதிபருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே, அனுப்பி வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்காத அமைச்சராக ருவான் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சைப் பொறுப்பேற்றவுள்ளார்.

இதன் பின்னர், அனைத்து ஊடக நிறுவனங்களும் ருவான் விஜேவர்த்தனவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளன.

ருவன் விஜேவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச்செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *