சிறிலங்காவின் பணவீக்கம் 8.3 வீதமாக அதிகரிப்பு
சிறிலங்காவில் ஒக்ரோபர் மாதத்தில் பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்ரெம்பர் மாதத்தில் பணவீக்கம், 8.0 சதவீதமாக இருந்த நிலையில், ஒக்ரோபரில், 0.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
ஒக்ரோபர் மாத உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாகவும், உணவு அல்லாத பணவீக்கம் 8.0 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
