அதிபர் வேட்பாளர் குறித்து கலந்துரையாடலில் பசில் இல்லை
சிறிலங்கா பொதுஜன முன்னணியின், அதிபர் வேட்பாளர் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேராசிரியர் ஜி.எஎல்.பீரிசின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதில், அதிபர் வேட்பாளர் தொடர்பாகவே முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். எனினும், பொதுஜன முன்னணியின் அமைப்பாளரான பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில், கோத்தாபய ராஜபக்சவை, அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் திட்டமிட்டிருந்த நிலையிலேயே, பசில் ராஜபக்ச இந்தக் கூட்டத்தை தவிர்த்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது.