மேலும்

மாதம்: November 2018

புதிய பிரதமரை நியமிக்கத் தயார் – சிறிலங்கா அதிபர் செவ்வி

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

அவசரநிலையை சமாளிக்க தயாராகுமாறு சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவு

மைத்திரி- மகிந்த அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள காவல்துறையினரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு சிறி்லங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்

சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், அதிபரின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான, கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகிந்த அணியின் இரட்டை வேடம் அம்பலம் – மேற்குலகுடன் இரகசிய பேரம்

மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

கைவிடுகிறது மகிந்த அணி – மைத்திரியின் திட்டம் தோல்வி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இல்லை என்று கொழும்பு ஊடகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீதாவாக்கபுர நகரசபையில் மகிந்த கட்சியின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிப்பு

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாளுக்கு தடை இல்லை – புலிகளின் கொடி, சின்னங்களுக்கே தடை

தற்போது, சிறிலங்கா இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் தலைமையகம் அமைந்துள்ள, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக,  மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் போது, விடுதலைப் புலிகளின் கொடி மற்றும் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து, யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது.

சிறிலங்காவின் நாணயப் பெறுமதி படுமோசமான வீழ்ச்சி

அரசியல் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மகிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, மகிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

மகிந்தவுக்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குத் தாக்கல்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், பிரதமர் செயலகத்தை ஆக்கிரமித்துள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.