மேலும்

அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியை நிராகரித்த எசல வீரக்கோன்

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராக பொறுப்பேற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை துறை சார் இராஜதந்திரியான எசல வீரக்கோன் நிராகரித்துள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவில் தூதுவராகப் பணியாற்றிய போது, எசல வீரக்கோன், பிரதித் தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.

தற்போது, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக இவர்  பணியாற்றி வருகிறார்.

நோயுற்றுள்ள தனது தந்தையைக் கவனிப்பதற்காக, சிறிலங்காவிலேயே  பணியாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாக எசல வீரக்கோன், தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *