மேலும்

இளைஞர்களை கடத்தப் பயன்படுத்திய வாகனம் – விபரம் தர மறுக்கும் சிறிலங்கா கடற்படை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்களை சிறிலங்கா கடற்படை இன்னமும் தமக்கு வழங்கவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்கள் இந்த விசாரணைக்குத் தேவைப்படுகின்ற போதும் சிறிலங்கா கடற்படை தலைமையகம்  அதனை இன்னமும் வழங்கவில்லை என்று கோட்டே நீதிவானிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று தெரிவித்தனர்.

அந்த வாகனம் முற்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கவில்லை.

அத்துடன், 2008ஆம் ஆண்டு நடந்த இந்தக் கடத்தல்கள் தொடர்பான, பிரதான சந்தேக நபரான கடற்படையின் முன்னாள் லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியின் கீழ் இருந்த கடற்படையினர் பயன்படுத்திய உந்துருளிகள் தொடர்பான எந்த விபரங்களும் தரப்படவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *