மேலும்

ஆதரிக்காவிடின் அரசியலை துறப்பாராம் டக்ளஸ்

வடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்காவிடின் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறியவர்கள் இப்போது, அதன் ஆட்சியைப் பிடிக்க முண்டியடிப்பதாக குற்றம்சாட்டிய டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றியவர்களால் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

வடக்கு மாகாணசபையைத் தாம் கைப்பற்றினால், அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்டுகளில் வடக்கை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றுவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கும் தமக்கு முழுமையான அதரவு கிடைக்காவிடின், அரசியலில் இருந்து ஒதுங்குவதை விட வேறு வழியில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *