மேலும்

நாள்: 12th March 2018

உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29 வீதமாக அதிகரிப்பு

சிறிலங்காவில் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29 வீதமாக அதிகரித்துள்ளது என்று தேர்தல் கண்காணப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் 100 மில்லியன் டொலரில் சூரியசக்தி மின் திட்டங்கள் – புதுடெல்லி மாநாட்டில் அறிவிப்பு

சிறிலங்காவில் 100 மில்லியன் டொலர்  செலவிலான இரண்டு சூரியசக்தி மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாக புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்டது மிருகத்தனத்தின் மற்றொரு வெளிப்பாடு – நவநீதம்பிள்ளை

கண்டியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது ‘மதம் சார்ந்த தாக்குதல் அல்ல. நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட- இரண்டு கிளர்ச்சிகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் சந்தித்த மிருகத்தனமான சம்பவங்களின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது என்று முன்னாள் ஐ. நா மனித உரிமைகள்  ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்

சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து நாள் பயணமாக இன்று ஜப்பானைச் சென்றடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கிறார் ஐ.நா உதவிச்செயலர்

சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டித்துள்ளார்.

ஜெனிவாவில் களம் இறங்குகிறார் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாட்டை நீ்க்குவது குறித்து விரைவில் முடிவு

தற்போது நடைமுறையில் உள்ள சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக, அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று சிறிலங்காவின் டிஜிட்டல்  உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு

திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது.