மேலும்

நாள்: 8th March 2018

கண்டியில் முப்படையினரும் குவிப்பு – இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமனம்

கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார பதவியேற்பு

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக, ஐதேகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டியில் காலை 10 மணியுடன் ஊரடங்கு நீக்கம்

கண்டி  மாவட்டத்தில் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு கோரவுள்ளேன் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய வன்முறைகளில் பலர் பலி? – கைக்குண்டும் வெடித்தது

கண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டியில் ஊரடங்கு நேரத்தில் நேற்றிரவும் வன்முறைகள் – தடுக்க முடியாமல் திணறும் படைகள்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கி.பி.அரவிந்தன் – ‘அன்று சொன்னதும் இன்று நடப்பதும்’

நேற்றுப்போல் இருக்கிறது…… அரவிந்தன் அண்ணாவின் வார்த்தைகள். அவர் மறைந்தே இன்றுடன் மூன்று ஆண்டுகளாகி விட்டன.