மேலும்

நாள்: 17th March 2018

மாலைதீவும் சிறிலங்காவும் -3

தெற்காசிய அரசியலில் சிறிலங்காவும் மாலைதீவும் சீன பொருளாதார, மூலோபாய தலையீடுகளினால் ஈர்க்கப்பட்டு, உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்தபோக்குடைய பல்வேறு குணாதிசயங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகளும் ரொஹிங்யா அகதிகளும் ஒன்றல்ல – இந்திய மத்திய அரசு

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாது என்று இந்திய  மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன் – மாற்று வழிகளுக்கு தலைமையேற்குமாறு கோருவார்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் நேற்று வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – இரட்டைவேடம் போடும் மகிந்த

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இரட்டைவேடம் போடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவில் நேற்று நடக்கவிருந்த சிறிலங்கா குறித்த விவாதம் திங்களன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த சிறிலங்கா குறித்த பூகோள கால மீளாய்வு விவாதம், வரும் 19ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

றியர் அட்மிரலை விசாரணைக்கு முன்னிலைப்படுத்துமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு  காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, றியர் அட்மிரல் ஆனந்த குருகேயை, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலைப்படுத்துமாறு கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டாவாவில் புத்தர் சிலை உடைப்பு – சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது

சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஒட்டாவாவில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.