நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்
மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.