மேலும்

நாள்: 31st March 2018

மாலியில் சிறிலங்கா இராணுவத்தைக் குறிவைத்த பாரிய கிளைமோர் குண்டு

ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தொடரணி ஒன்று பாரிய கிளைமோர் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.

கூட்டு அரசாங்கம் தொடராது – சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எச்சரிக்கை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து நீக்கப்படாவிடின், வரும் ஏபரல் 4ஆம் நாளுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கம் பதவியில் இருக்காது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணிலைக் காப்பாற்ற வேண்டாம்- சம்பந்தனுக்கு ரத்தன தேரர் அவசர கடிதம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட மங்கள சமரவீர இணக்கம்

முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்புக்கு வாக்களித்த உறுப்பினர்களை நீக்குகிறார் சங்கரி – வேலணையில் விடயத்தில் மௌனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் விரைவில் கொழும்பு பயணம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – உறுப்பினரை நீக்க முடிவு?

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.