மேலும்

நாள்: 1st March 2018

ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.

மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படையில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் படைப்பிரிவு வேகமாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்துக்குள் மரைன் படைப்பிரிவின் மூன்றாவது அணி பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கிறது.

“முக்கியமான நகர்வு“ – அமெரிக்கத் தூதுவர்

காணாமல் போனோர் பணியகத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது, முக்கியமானதொரு நகர்வு என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவரைச் சந்தித்தார் கோத்தா

சிறிலங்காவுக்கான சீனாவின் புதிய தூதுவராகப் பதவியேற்றுள்ள செங் ஷுயுவானை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் – இராணுவ பிரதிநிதிக்கும் இடமளிப்பு

காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார்.

இன்று சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

கொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

கொத்துக்குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா குறித்த தவறான புரிதல்களைக் கொண்டிருந்தது இந்தியா – மகிந்த

சிறிலங்காவில் இந்தியா துறைமுகங்களைக் கட்டவோ, நெடுஞ்சாலைகளை அமைக்கவோ இந்தியா ஆர்வம்காட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார்.