மேலும்

கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு

British cannons discovered at Trincoதிருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது.

இலங்கையை தமது கொலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் பிரித்தானியர்கள் தமது கொலனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கரையோரப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக பல கோட்டைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இங்கு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பிரித்தானியர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு பீரங்கிகள் அண்மையில் திருகோணமலை வைத்தியசாலைக்கான விபத்து விடுதி ஒன்றைப் புனரமைக்கும் போது கண்டெடுக்கப்பட்டன. இவ்விரு பீரங்கிகளில் ஒன்று கண்டெடுக்கப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னர் மற்றைய பீரங்கி கண்டெடுக்கப்பட்டதாக திருகோணமலைக்கான தொல்பொருள் திணைக்களத்தின் உதவி இயக்குநர் A.H.A சுமணதாச தெரிவித்தார்.

‘இறுதியாகக் கண்டெடுக்கப்பட்ட பீரங்கியானது எட்டு தொன்கள் நிறை கொண்டதாகவும் 11 அடி நீளமானதாகவும் காணப்பட்டது. இது தற்போது சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலையிலுள்ள கரையோர மற்றும் கடற்படை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.trinco-cannon

இப்பீரங்கியை சுத்தம் செய்து பாதுகாப்பதற்காக தொல்லியல் திணைக்களத்தின் இரசாயன பாதுகாப்புப் பிரிவின் வல்லுநர் குழுவிற்காகக் காத்திருக்கிறோம்’ என சுமணதாச தெரிவித்தார்.

கனோன் – ‘cannon’  ( பீரங்கி) எனப்படும் சொல்,  இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளின் ஒரு கலப்புச் சொல்லாகவே காணப்படுகிறது. இதன் அர்த்தம் குழாய், கரும்பு, நாணல் ஆகும். வரலாற்று சான்றாதாரங்களின் படி, இப்பதமானது இலத்தீனில் துப்பாக்கி என்பதைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு, பின்னர் 1326ல் இத்தாலியாராலும் 1418ல் பிரித்தானியராலும் கனோன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

கனோன் என்பது 14ம் நூற்றாண்டில் முதன் முதலாக ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டாலும்  கூட, 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இது தனக்கான உன்னதமான வடிவத்தை எடுத்துக்கொண்டது.

19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து முகவாயில் துப்பாக்கிகளை ஏற்றுகின்ற கனோன்கள் (RML) பயன்படுத்தப்பட்டன என ஓய்வுபெற்ற லெப்ரினன்ட் கொமாண்டர் சோமசிறி தேவேந்திரா தெரிவித்தார். அண்மையில் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட கனோனும் RML வகையைச் சார்ந்தது என அவர் கூறினார்.

பிரெடெரிக் கோட்டையிலுள்ள கச்சேரி உட்பட திருகோணமலையின் பல்வேறு இடங்களிலும் RML  கனோன்கள் கண்டெடுக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார். திருகோணமலையிலுள்ள ஒஸ்றென்பேர்க் றிட்ஜ்ஜில் 1980களில் கண்டெடுக்கப்பட்ட RML கனோன் தொடர்பாக திரு.தேவேந்திரா ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். சேர் வில்லியம் ஆம்ஸ்ரோங்கின் கண்டுபிடிப்பை அடுத்து RML கனோன்கள் ‘ஆம்ஸ்ரோங் பீரங்கிகள்’ எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கனோன் எக்காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது என்கின்ற விடயம் இன்னமும் உறுதிப்படுத்தப்படாது விட்டாலும் கூட, இரசாயன பகுப்பாய்வைத் தொடர்ந்து இது பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுவதாக திரு.தேவேந்திரா தெரிவித்தார்.

‘RML கனோன்கள் 1860ன் பின்னர் பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்டதுடன் 1900ன் பின்னர் இவை மாற்றீடு செய்யப்பட்டன. திருகோணமலை பிரித்தானியர்களின் வசம் வீழ்ந்த பின்னரே பிரித்தானிய பீரங்கிகள் பொருத்தப்பட்டன’ என திரு.தேவேந்திரா தெரிவித்தார்.

பீரங்கியின் குழாய் வடிவப் பகுதி கூட்டிற்குள் (Chamber) முடிவடைகிறது.  பீரங்கியின் குண்டானது குழாய்க்குள் செருகப்பட்டு இதன் கூட்டடிற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் கூட்டிற்குள் மருந்துத் துகள்கள் காணப்படுகின்றன. இறுதியில் மருந்துத் துகள்களைக் கொண்ட குண்டானது கனோனின் குழாய் ஊடாக வெளியில் செலுத்தப்படுகின்றது.

Cannon-Unloaded-in-trincomalee-Harbour

 திருகோணமலை துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்படும் பீரங்கிகள்

கொழும்பிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கனோன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிங்களப் பீரங்கிகள் கூட தயாரிக்கப்பட்டன என்பது சுவாரசியமானதாகும்.

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி ஒன்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பீரங்கியானது மிகவும் நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்டதன் மூலம் புராதன இலங்கை கைவினைஞரின் திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான பீரங்கிகள் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின்ட கட்டளைக்கிணங்க தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Somasiri-devendea-with-a-replica-of-a-Cannon-1கொலனித்துவ காலத்திற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் அனைத்திலும் பிரித்தானிய அரச இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. ‘இந்த பீரங்கிகள் அனைத்தும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டு கப்பல்களில் இங்கு கொண்டு வரப்பட்டன.

இவை கொலனித்துவத்திற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வெண்கல மற்றும் இரும்பு முலாம் பூசப்பட்ட பீரங்கிகள் போலல்லாது, இரும்பு மற்றும் உருக்கு போன்றவற்றால் தயாரிக்கப்பட்டன. இவை கோட்டைகள் மற்றும் கரையோர பாதுகாப்பிற்காகவும் கப்பல்களிலும் பொருத்தப்பட்டன’ என திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து பிரித்தானியக் கப்பல் ஒன்று பீரங்கிகளை இறக்கும் ஒளிப்படத்தைக் காண்பித்தவாறு திரு.தேவேந்திரா விளக்கினார்.

இன்று இப்பீரங்கிகள் விழாக்களுக்காகவே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. கொழும்பு வெளிச்ச வீட்டில் வைக்கப்பட்டுள்ள பீரங்கிகள் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தப்படுகின்றன. ‘இப்பீரங்கிகளுக்கு வர்ணம் தீட்டுவதானது அவற்றின் மீது பொறிக்கப்பட்டுள்ளதும் இதன் வரலாற்றை எடுத்துரைக்கின்ற சின்னங்களை மறைக்கும். இதனால் இந்த வரலாறு நிரந்தரமாகவே அழிந்து போகக்கூடும்’ என திரு.தேவேந்திரா தெரிவித்தார்.

வழிமூலம்        – Sunday times
ஆங்கிலத்தில்  – Randima Attygalle
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *