மேலும்

நாள்: 7th March 2018

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது ஐ.நா

சிறிலங்காவில் வெடித்துள்ள இன வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

எரிக்கப்பட்ட வாணிப நிலையத்தில் பறக்கவிடப்பட்ட சிங்கக் கொடி

கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள் (படங்கள்)

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது.

கண்டி கலவரங்களுக்குப் பின்னால் மகிந்த? – புலனாய்வு அறிக்கை

கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிப்பதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான காவல்துறை குழுவொன்று துணைபோயுள்ளதாக அரச புலனாய்வு  அமைப்புகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கை அளித்துள்ளன.

கண்டியில் காலவரையற்ற ஊரடங்கு – வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை

கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் இன்று முற்பகல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கம்

சிறிலங்காவில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைகளை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சமூக வலைத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவசரகாலச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்- அமெரிக்கா அழுத்தம்

சிறிலங்காவில் நேற்று பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச்சட்டம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக சம்பவங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்தார்.

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

சிறிலங்காவில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.