எரிக்கப்பட்ட வாணிப நிலையத்தில் பறக்கவிடப்பட்ட சிங்கக் கொடி
கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
கட்டுகஸ்தோட்டை, உகுரெசபிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாணிப நிலையங்களின் மீது, இன்று காலை 11.30 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன.
தீயிட்டு எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் வெதுப்பகத்தின் முன்பாக, சிங்களக் காடையர்கள், சிங்கக்கொடியையும் பறக்கவிட்டுள்ளனர்.
சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படும், வாளேந்திய சிங்கம் மாத்திரம் இடம்பெற்றுள்ள கொடியே பறக்கவிடப்பட்டுள்ளது.