மேலும்

Tag Archives: மனித உரிமைகள்

பயங்கரவாத குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலமே கையாளப்பட வேண்டும்

1979ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்,  பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலம் கையாளப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

க்ஷரியா சட்டத்தின் கீழேயே அனோஜனுக்கு மரணதண்டனை – விஜித ஹேரத்

க்ஷரியா சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என சவூதி தரப்பு சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்தே, சிவராசா அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் – அனைத்துலக தரத்துடன் விசாரணை நடத்த வேண்டும்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் குறித்து அனைத்துலகத் தரத்திற்கு இணங்க, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிறிலங்காவிடம் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

நீர்த்துப்போன ஐ.நா அறிக்கை – குற்றம்சாட்டும் சிவில் சமூகம்

இரு பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்- ஐ.நா

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

பொறுப்புக்கூறலை விரைவுபடுத்த சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

கடந்த காலக் கொடிய மீறல்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வழக்கு விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இது எதிர்கால முன்னேற்றம் குறித்து கவலைகளை எழுப்புகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விரைவான, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைகளை வலியுறுத்துகிறது ஐ.நா

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

அனைத்துலக பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன் (elaine pearson) தெரிவித்துள்ளார்.

அனுரவின் மேநாள் உரை- ஐ.நா சிறப்பு அறிக்கையாளரிடம் எதிர்க்கட்சி எம்.பிகள் முறைப்பாடு

மே நாள் பேரணியில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து,  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளது.

வட, கிழக்கில் துன்புறுத்தப்படும் செயற்பாட்டாளர்கள்- மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து,  காவல்துறை மா அதிபருக்கும்,  பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  கடிதம் அனுப்பியுள்ளது.