மேலும்

மாதம்: December 2017

தேர்தலுக்குப் பின் மகிந்தவின் கட்சி அழிந்து விடும் – தயாசிறி ஜெயசேகர

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை நாமல் ராஜபக்சவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்ததாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தவின் கட்சி அழிந்து போய் விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவடையவுள்ளது. முதற்கட்டமாக, வேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இன்று நண்பரல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அடுத்தவாரம் வட-கிழக்கு பருவமழை சிறிலங்காவைத் தாக்கும்

அடுத்தவாரம் வட-கிழக்கு பருவமழை சிறிலங்காவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடியும் வரை அரச நியமனங்களை இடைநிறுத்த உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கு அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

7 முன்னாள் புலிகளுக்கு தலா 56 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ஏழு பேருக்கு அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றம், தலா 56 ஆண்டுகள் கரூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் கோரிக்கையை ஏற்று 75 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியாவை அனுப்புகிறது பாகிஸ்தான்

சிறிலங்கா அதிபரின் அவசர கோரிக்கையை ஏற்று, 75 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியா உரத்தை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க பாகிஸ்தான் பிரதமர் இணங்கியுள்ளார்.

கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவது குறித்து இஸ்ரேலிய நிறுவனம் சிறிலங்காவுடன் பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவது குறித்து, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ் நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

நெஸ்பி பிரபுவுக்கு இரகசியமாக நன்றிக் கடிதம் அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்திய விமானப்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மைத்திரி பக்கம் பாய்கிறார் கூட்டு எதிரணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் தாவவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.