மேலும்

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் இந்திய கடற்படை துணைத் தளபதி

இந்திய கடற்படையின் துணைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுத்துறை) றியர் அட்மிரல் சிறிநிவாஸ் மாதுலா (Srinivas Maddula), சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர், நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, இரு தரப்பினரும் பரஸ்பரம் ஆர்வமுள்ள விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்துள்ளனர்.

கடல்சார் மற்றும் பரந்த பாதுகாப்பு களங்களில் நீடித்த ஈடுபாடு மற்றும் மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் உட்பட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதேவேளை, இந்திய கடற்படையின் துணைத் தளபதி றியர் அட்மிரல் சிறிநிவாஸ் மாதுலா, நேற்று சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *