வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு 27ஆம் திகதி வெளியாகும்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு எதிர்வரும் நொவம்பர் மாதம் 27ஆம் நாள் வெளியிடப்படும் என்றும் சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க இன்று தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை வரும் 27ஆம் நாள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.