மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் இந்தோனேசியப் போர்க்கப்பல்

Indonesian Naval Ship KRI Bung Tomoஇந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.

நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல், மூன்று நாட்கள் இங்கு தரித்திருக்கும் என்று சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

கேஆர்ஐ பங் ரோமோ என்ற இந்தப் போர்க்கப்பலில், 107 இந்தோனேசியக் கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.

Indonesian Naval Ship KRI Bung Tomo

கொழும்புத் துறைமுகத்தின் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, இந்தோனேசியக் கடற்படையினர் பயிற்சிகளிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *