மேலும்

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ்ப்பெண் ரதி தோல்வி

Rathy Alagaratnamபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண்ணான ரதி அழகரத்தினம் தோல்வியடைந்துள்ளார். இவர், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் சார்பில், ஹரோ வெஸ்ட் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் தொழிற்கட்சி வேட்பாளர் 13,314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரதி அழகரத்தினம், 470 வாக்குகளை மாத்திரம் பெற்று ஐந்தாமிடத்தைப் பெற்றார்.

ரதி அழகரத்தினம் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி சார்பில் கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்டு 1606 வாக்குகளைப் பெற்று ஐந்தாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இவர் போட்டியிட்ட ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சிக்கு இம்முறை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *