மேலும்

உதவிப் பணிகளில் ஈடுபட கொழும்பு வந்தது யுஎஸ்எஸ் லேக் எரி போர்க்கப்பல்

USS Lake Erieஅமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் லேக் எரி (USS Lake Erie) 14 நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில், மனிதாபிமான உதவிப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்தப் போர்க்கப்பல் கொழும்பு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

360 அமெரிக்க கடற்படையினர் இந்தப் போர்க்கப்பலில் கொழும்பு வந்துள்ளனர். இவர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபடவுள்ளதுடன், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளனர்.

USS Lake Erie

USS Lake Erie -colombo

ஜூன் 25ஆம் நாள் வரை யுஎஸ்எஸ் லேக் எரி போர்க்கப்பல் கொழும்பில் தரித்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *