மேலும்

Tag Archives: டொலர்

சீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கிடைத்த 1 பில்லியன் டொலர்

சீனாவிடம் இருந்து நேற்று சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  சிறிலங்கா நாணயத்தை வலுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நிதியுதவி பயன்படும் என்று கூறப்படுகிறது.

4 மாதங்களில் 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி

இந்த ஆண்டில் முதல் நான்கு ஆண்டுகளில், 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு கடன் நெருக்கடி மோசமடையும் – மங்கள சமரவீர எச்சரிக்கை

சிறிலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த ஆண்டிலேயே அதிகளவான  கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டில் கடன் நெருக்கடி மேலும் மோசமடையும் என்றும் எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர.

கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா

சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

வியட்னாம் தீவு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட சிறிலங்காவின் ஜெனரல்கள்

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகளும் அவர்களின் மனைவிமாரும், வியட்னாமில் உள்ள தீவு ஒன்றில் கடந்த வாரம் தடுத்து வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இரண்டு நிதிக் கொடைத் திட்டங்களுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவின் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நிதியுதவி வழங்கவுள்ளது.

சிறிலங்காவின் தனிநபர் வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்ச்சி

சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கிய வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

மகிந்த அரசு பெற்ற கடன் 9.3 பில்லியன் டொலர்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பெறப்பட்ட 9.3 பில்லியன் டொலரை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவது இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல் – ஜி.பார்த்தசாரதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் சிறிலங்கா கையளிக்கவுள்ளதானது, இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, புதுடெல்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் வருகை பேராசிரியரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

முப்படைகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன் – பலாலியில் சிறிலங்கா அதிபர் உறுதி

சிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.