79 வீதமான சிறிலங்கா மக்கள் இந்தியாவை நேர்மறையாக பார்க்கிறார்கள் – ஜெய்சங்கர்
சிறிலங்கா மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக, கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிகளுக்கான களமாக மாற்றப்படக் கூடாது என்றும், அது நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகளுக்கான ஒரு தளமாகச் செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக சிறிலங்காவின் துறைமுகங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே நீடிப்பதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தனது பொருளாதார இருப்பை வலுப்படுத்தவும், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும், இந்தியா தொடர்ச்சியான மூலோபாய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம், சிறிலங்காவில் தனது கடல்சார் இருப்பை அதிகரித்து வருகிறது.
எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது என சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.